யாழில் பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞரின் மரணத்துக்கு நீதிகோரி சடலத்துடன் வீதிக்கு இறங்கிய மக்கள்!
வட்டுக்கோட்டையில் பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனுக்கு நீதி கோரி சித்தங்கேணியில் சடலத்துடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அலெக்ஸின் மரணத்திற்கு நீதி வேண்டும், குற்றவாளிகளை கைது செய்யாதது ஏன், பொலிஸாரின் நடவடிக்கையில் திருப்தி இல்லை என்ற கோஷங்களை எழுப்பியிருந்தனர்.

குறித்த இளைஞரின் மரணத்திற்கு நீதி கோரி பல்வேறு அமைப்புகள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் குரல் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





