ஐரோப்பா

இத்தாலியின் முக்கிய நகரத்திற்கு வர வேண்டாம் என மக்கள் கோரிக்கை!

இத்தாலியில் சுற்றுப்பயணிகளிடையே மிகப் பிரபலமான வெனிஸ் நகரத்திற்கு வரவேண்டாம் என வெனிஸ் நகரவாசிகள் இப்போது சொல்லத் தொடங்கியுள்ளனர்.

தண்ணீர் நகரமான வெனிஸ் 1987ஆம் ஆண்டு உலக மரபுடைமைப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

பருவநிலை மாற்றம், அதிக அளவில் சுற்றுப்பயணிகள் வந்துசெல்வது, பராமரிப்புகளில் போதிய கவனம் செலுத்தப்படாமல் இருப்பது போன்ற விடயங்களால் வெனிஸ் நகரம் கொஞ்சம் கொஞ்சமாய் அதன் பொலிவை இழந்துவருவதாகக் UNESCO தெரிவித்துள்ளது.

அதன் உலக மரபுடைமைத் தலங்களில் தற்போது 1,157 இடங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 10, ஆபத்தை எதிர்நோக்கும் இடங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

அதில் வெனிஸையும் சேர்த்துக்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தக் கட்டணம் வசூலிப்பது குறித்து முன்பு பரிசீலிக்கப்பட்டது.

எதிர்ப்புகள் எழுந்ததால் அதை நடைமுறைப்படுத்த இயலாமல் போனது. நிலைமை மிக மோசமாக இருக்கிறது. சுற்றுப்பயணிகளை நகருக்கு வரவேண்டாம் என்கின்றனர் வெனிஸ்வாசிகள்.

அரசாங்கத்துடன் கலந்துபேசி அடுத்த கட்ட நடவடிக்கைகளை அறிவிக்கவிருப்பதாக நகராட்சியின் பேச்சாளர் கூறினார்.

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்