நேட்டோவுக்கு எதிராக ஜேர்மனியில் மக்கள் போராட்டம்..!
ரஷ்ய- உக்ரைன் மோதலை நேட்டோ அமைப்பு தொடர்ந்து தூண்டிவிட்டு வருவதாக கூறி அதன் உறுப்பு நாடான ஜேர்மனியில் மக்கள் போராட்ட்ம் நடத்தினர். சொந்த நலனுக்காக உலகம் முழுவதும் போர்களை நடத்தி வருவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
போர் வேண்டாம் அமைதியே வேண்டும், ஆயுதங்கள் அமைதியை தராது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி அவர்கள் பேரணி சென்றனர்.
லிபியா,ஆப்கானிஸ்தான், ஈராக் நாடுகளை ஆக்கிரமித்து நேட்டோ போர் நடத்தியதாக போராட்டக்கார்ர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பி அந்தாட்டு நெருக்கடியை ஏற்படுத்தி வருவதாக கைறிந அவர்கள் உக்ரைனுக்கு ஆயுத உதவியை உடனடிநாக நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
பொருளாதார பாதிப்பு, பணவீக்கம் என ஜேர்மனியிலேயே பல பிரச்சனைகள் உள்ள நிலையில் உக்ரைனுக்கு ஜேர்மனி ஆயுத உதவி வழங்கி வருவதை போராட்டக்காரர்கள் கடுமையாக விமர்சித்தனர்.