அர்ஜென்டினாவின் புதிய அதிபர் ஜேவியர் மில்லேவின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக மக்கள் போராட்டம்!
அர்ஜென்டினாவின் புதிய அதிபர் ஜேவியர் மில்லேவின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் தொடங்கிய போராட்டம் தொடர்கிறது.
தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினரை ஈடுபடுத்த செலவழித்த பணத்தை ஈடுகட்ட போராட்ட ஏற்பாட்டாளர்கள் பணியாற்ற வேண்டும் என்று அரசு கூறியுள்ளது.
அந்நாட்டின் தலைநகர் பியூனஸ் அயர்ஸை மையமாகக் கொண்டு பல நகரங்களில் போராட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
புதிய ஜனாதிபதி Javier Mille அர்ஜென்டினாவின் பொருளாதாரத்தை உயர்த்த பல பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார்.
ஏற்றுமதி கட்டுப்பாடுகளை நீக்குதல், அரசின் செலவினங்களை குறைத்தல் போன்ற அந்த சீர்திருத்தங்களுக்கு நாட்டு மக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
(Visited 4 times, 1 visits today)