பிரான்ஸ் மக்களுக்கு நாளைய தினம் முதல் காத்திருக்கும் நெருக்கடி

பிரான்ஸில் நாளைய தினம் முதல் மின்சாரக்கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளதாக பொருளாதார அமைச்சர் Bruno Le Maire அறிவித்துள்ளார்.
மின்சாரக்கட்டணம் 9.8% சதவீதத்தால் அதிகரிக்க உள்ளது. பொருளாதார அமைச்சர் இதனை அறிவித்துள்ளார்.
“இரண்டு பிள்ளைகளுடன் வசிக்கும் நால்வர் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு சராசரியாக 18 யூரோக்கள் மாதம் கட்டணம் அதிகமாக செலுத்த நேரும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வு ஒழுங்குபடுத்தப்பட்ட விகித முறையில் கட்டணம் செலுத்துபவர்களுக்கான ( 9.3 மில்லியன் மக்கள்) அதிகரிப்பாகும்.
அதேவேளை, ஒழுங்குபடுத்தப்பட்ட விகிதம் முறையில் கட்டணம் செலுத்துபவர்கள் (10.6 மில்லியன் பேர்) 8.6% சதவீதத்தால் கட்டண உயர்வைச் சந்திக்கின்றனர்.
(Visited 13 times, 1 visits today)