செய்தி

திருமணம் காரணமாக கொழும்பிற்கு இடம்பெயரும் மக்கள் – புள்ளிவிபரம் வெளியீடு!

இலங்கையில் மூன்று மில்லியன் மக்களில் திருமணம் காரணமாக 40.6 சதவீதம் பேர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சமீபத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த புலம்பெயர்ந்த மக்கள் தொகை 3,167,263 ஆக உள்ளது, இதில் 40.6 சதவீதம் (1,285,909) பேர் முக்கியமாக திருமண காரணங்களுக்காக இடம்பெயர்ந்துள்ளனர்.

வேலைவாய்ப்பு அல்லது வேலை தேடுவதை நோக்கமாகக் கொண்டு (17.1%) வீதமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். குடும்பத் தேவைகள் (16.2%) மற்றும் நிரந்தர குடியிருப்புக்குத் திரும்புதல் (11.3%) ஆகியவற்றுக்காக பலர் இடம்பெயர்ந்துள்ளனர்.

கல்விக்காக இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 6.5 சதவீதமாக காணப்படுகிறது. அதேவேளை மீள்குடியேற்றத்திற்காக இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 3.3 சதவீதமாக உள்ளது.

அதேநேரம் 1.6 சதவீதமானோர் பேரழிவுகள் காரணமாகவும், மத நோக்கங்களுக்காக 2.1 சதவீதமானோரும் இடம்பெயர்ந்துள்ளனர்.

(Visited 1 times, 1 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!