பிரித்தானியாவிற்கு புலம்பெயரும் மக்கள் – சீனா மீது விழுந்துள்ள குற்றச்சாட்டு!
சீனாவில் தயாரிக்கப்பட்ட ‘மெகா டிங்கி’ படகுகள் சட்டவிரோத குடியேறிகளின் வருகையை அதிகரிக்கச் செய்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதிக சுமை ஏற்றப்பட்ட சிறிய படகு நூற்றுக்கும் மேற்பட்ட மக்களுடன் வடக்கு பிரான்சிலிருந்து பிரித்தானியா நோக்கி பயணித்ததாக கூறப்படுகிறது. மக்கள் தொகை குறித்த சரியான புள்ளிவிபரம் தெரியவரவில்லை.
குறித்த டிங்கி படகு சுமார் 40 அடி நீளமுள்ள புதிய வகை பெரிய டிங்கி படகுகளில் ஒன்றாகும் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பெரிய கப்பல்களை வழங்கியதற்காக சீனாவில் உள்ள நிறுவனங்களை பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர், கடத்தல்காரர்கள் முடிந்தவரை அதிக பணம் சம்பாதிக்கும் முயற்சியில் ஏராளமான மக்களை ஏற்றுவதாக கூறப்படுகிறது.
இது துயரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறித்த படகு சுமார் $1,535 (£1,141) இற்கு விற்பனை செய்யப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.





