லெபனானில் இருந்து கொத்து கொத்தாக வெளியேறும் மக்கள் : தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல்கள்!
இஸ்ரேலின் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களால் லெபனானில் உள்ள ஒரு மில்லியன் மக்கள் அவரிகளின் வீடுகளில் இருந்து வெளியேறியிருக்கலாம் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
“இது நடந்திருக்கக்கூடிய மிகப்பெரிய இடப்பெயர்வு இயக்கம்” என்று லெபனான் பிரதமர் நஜிப் மிகாடி தெரிவித்துள்ளார்.
பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் படுகொலை செய்த இரண்டு நாட்களுக்குப் பிறகு 50 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஹிஸ்புல்லா வடக்கு இஸ்ரேல் மீது அதிக ராக்கெட்டுகளை ஏவி தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகிறது.
உயர்மட்ட இராணுவத் தளபதி அலி கராக்கி மற்றும் மூத்த மதகுரு ஷேக் நபில் கௌக் ஆகியோரும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டதை ஞாயிற்றுக்கிழமை ஹிஸ்புல்லா உறுதிப்படுத்தியுள்ளது.
லெபனானின் பிரதம மந்திரி மிகாட்டி கூறுகையில், வான்வழித் தாக்குதல்களின் அலை பெய்ரூட் மற்றும் தெற்கு எல்லைப் பகுதிகள் உட்பட நாட்டின் பிற பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.