இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு மத்தியில் காசாவைவிட்டு வெளியேறும் மக்கள்!

இஸ்ரேலின் வெளியேற்ற உத்தரவுகளுக்குப் பிறகு மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதைப் பார்ப்பது “முற்றிலும் இதயத்தை உடைப்பதாக காசா நகர பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய இராணுவம் பிரதேசத்தின் மிகப்பெரிய குடியிருப்புப் பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் அதே வேளையில், காசாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
காசா நகரத்தின் தெற்கே உள்ள பகுதிகள் ” பாதுகாப்பானவை அல்ல” என்பதால், வெளியேற்ற முடிவு கடினமானது எனவும் தற்போதைக்கு ஒரு சில குடும்பங்கள் வடக்கில் தங்குவதற்கு முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
“நான் வீட்டை விட்டு வெளியேறினால், உங்கள் உயிரைத் தவிர இழப்பதற்கு எதுவும் இல்லை என்று நான் உணர்கிறேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க ஐரோப்பிய நாடுகளில் பல நாடுகள் முடிவெடுத்துள்ளன. இத்தாலி அதன் முடிவை அறிவிப்பதில் தாமத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இத்தாலியின் ரோம் நகரில் ஒன்றுக்கூடிய ஆயிரகணக்கான மக்கள் பேரணிகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.