ஐரோப்பா

பிரித்தானியாவின் கடலோர நகரத்தில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள்!

பிரித்தானியாவில் கடலோர நகரத்தில் வசிக்கும் மக்கள் மர்மமான நோயுடன் போராடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் தற்போது விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதாவது குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள், கடுமையான நீர் வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, குமட்டல் அல்லது வாந்தி, லேசான காய்ச்சல் மற்றும் பசியின்மை போன்ற நோய்தாக்கங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இவ்வாறான நோய் நிலைமைகளுக்கு தண்ணீர் பிரச்சினைதான் முக்கிய காரணம் என சமூக ஊடகங்களில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இருப்பினும் நீரின் தரநிலைகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், தண்ணீர் விநியோகம் நன்றாக உள்ளது என்றும் நீர்விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் UK ஹெல்த் செக்யூரிட்டி ஏஜென்சிக்கு ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!