சிங்கப்பூரில் வேறு நபர்கள் பயன்படுத்திய ஆடைகளை அணிய ஆர்வம் காட்டும் மக்கள்

சிங்கப்பூரில் வேறு நபர்கள் பயன்படுத்திய ஆடைகளை வாங்கி அணிவதில் மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பழைய பொருட்களை விற்கும் கடைகள் வியாபாரம் கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு 50 சதவீதத்திற்கு மேல் கூடியிருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
மற்றவர்கள் அணிந்த ஆடைகளை வாங்கி அணிவது என்பது முன்பெல்லாம் சிலரை முகம் சுளிக்க வைக்கும்.
இப்போது அந்தப் போக்கில் மாற்றம் தெரிகிறது. நோன்புப் பெருநாள் போன்ற பண்டிகைக் காலங்களிலும் மற்றவர்கள் பயன்படுத்திய ஆடைகளை வாங்கி அணிவது இப்போது வாடிக்கையாகிவிட்டது.
புதிய ஆடைகளைவிட விலை குறைவு, சுற்றுச்சூழலுக்கு உகந்தது எனப் பல காரணங்களுக்காக வாடிக்கையாளர்கள் அத்தகைய ஆடைகளை நாடுகின்றனர். ஏதேனும் பொக்கிஷம்கூடக் கிடைக்கலாம் என பலர் தெரிவித்துள்ளனர்.
குறைந்த விலையில் நிறைவான வகையில் பொருள் வாங்கும் போக்கு வயது பாராது அனைவரையும் ஈர்ப்பதாக குறிப்பிடப்படுகின்றது.