இந்தியாவில் திடீரென முடி கொட்டும் பிரச்சினையால் அவதிப்படும் மக்கள் : பரவி வரும் மர்ம வைரஸ்!
இந்தியாவில் திடீரென முடி கொட்டும் வைரஸ் பரவி வருகின்றமை குறித்து அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மகாராஷ்டிராவின் புல்தானா பகுதியில் உள்ள பல கிராமங்களில் வசிப்பவர்களைப் பாதித்து வரும் இந்த சுகாதாரப் பிரச்சினை குறித்து விசாரணை நடந்து வருவதாக இந்திய சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
ஒரு வாரத்தில் வழுக்கைக்கு வழிவகுக்கும் விரைவான முடி உதிர்தல் இந்த நோயின் அறிகுறிகளில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஷெகான் தாலுகாவில் உள்ள போர்கான், கல்வாட் மற்றும் ஹிங்னாவில் வசிக்கும் மக்கள் குறிப்பிடத்தக்க முடி உதிர்தலை அனுபவித்து வருகின்றனர்.
இதுவரை சுமார் 50 நபர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரக் குழு கண்டறிந்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)