ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் 100 யூரோவில் டுபாய் சொக்லேட் பெற 10 மணித்தியாலங்கள் காத்திருக்கும் மக்கள்

 

இணையத்தில் பிரபலமான டுபாய் சொக்லேட் பெற்றுக் கொள்வதற்காக ஜெர்மனியில் மக்கள் அலை மோதுவாக தெரியவந்துள்ளது.

பிஸ்தா சொக்லேட் மோகம் பெர்லினின் இனிப்புச் சந்தையை இயக்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சொக்லேட் 2021ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. டுபாயில் வசிக்கும் பிரிட்டிஷ்-எகிப்து தொழிலதிபர் சேரா ஹாமுடா (Sarah Hamouda) அதை அறிமுகம் செய்தார். அந்தச் சொக்லேட் பல வித்தியாசமான சுவைகளில் வந்தாலும் பிரபலமானது பாதாம் சுவைதான்.

ஆனால் அந்தச் சொக்லேட் கட்டிகள் உள்ளூர் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதுவும் குறைந்த எண்ணிக்கையிலேயே கிடைக்கின்றது. அதனால் அதைப் போன்ற சொக்லேட்டை தயாரிக்கப் பல கடைகள் போட்டிப் போடுகின்றன.

“நான் 10 மணி நேரமாகக் காத்திருக்கிறேன். நள்ளிரவிலிருந்து இங்குதான் இருக்கிறேன்” என்று கடை வாசலில் காத்துக் கிடக்கும் 18 வயது மாணவர் தெரிவித்துள்ளார்.

20, 50 யூரோ என்ற விலையில் விற்பனை செய்யப்பட்ட குறித்த சொக்லேட் தற்போது 100 யூரோவில் கொள்வனவு செய்வதற்கும் மக்கள் தயாராகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

(Visited 60 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி