கலிஃபோர்னியாவில் அடுத்தடுத்து பதிவாகிய நிலநடுக்கங்களால் அச்சத்தில் மக்கள்!

கலிஃபோர்னியாவில் 24 மணி நேரத்திற்குள் மூன்று நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்ளூர் நேரப்படி மதியம் 12:33 மணிக்கு வாக்கருக்கு வடமேற்கே நான்கு மைல் தொலைவில் 3.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து உள்ளூர் நேரப்படி காலை 10:45 மணிக்கு பார்ஸ்டோவிலிருந்து 10 மைல் வடகிழக்கே 2.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை 5:40 மணிக்கு, பச்சேகோவிலிருந்து இரண்டு மைல் தொலைவில் 2.6 ரிக்டர் அளவில் மற்றுமோர் நிலநடுக்கம் பதிவாகியதாக கூறப்படுகிறது.
நில அதிர்வு நிகழ்வுகள் சிறியதாகக் கருதப்பட்டாலும், அருகிலுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள், நில அதிர்வுகளை உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர். அடுத்தடுத்து பதிவாகிய நிலநடுக்கங்கள் காரணமாக அச்ச உணர்வு ஏற்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
(Visited 25 times, 1 visits today)