உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் 03 மணிநேரம் இலவச மின்சாரத்தை பெறும் மக்கள்!

ஆஸ்திரேலிய அரசாங்கம் 2026 ஆம் ஆண்டு ஜுலை மாதம் “சூரிய பகிர்வு” (solar sharer) திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக எரிசக்தி அமைச்சர் கிறிஸ் போவன் (Chris Bowen) இன்று அறிவித்துள்ளார்.

இதன்மூலம் ஸ்மார்ட் மீட்டர்களைக் ( smart meters) கொண்ட வீடுகளுக்கு தினமும் குறைந்தது மூன்று மணிநேரம் இலவச சூரிய மின்சாரத்தை வழங்க முடியும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனை முயற்சி ஆரம்பத்தில் நியூ சவுத் வேல்ஸ் (New South Wales), குயின்ஸ்லாந்து (Queensland)  மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் (Australia) உள்ள வீடுகளுக்கு வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தின் மூலம்  நுகர்வோருக்கு  மின்சார கட்டமைப்பில் உள்ள  அழுத்தத்தைக் குறைக்கவும்,  ஆற்றல் செலவுகளைக் குறைக்கவும்  உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவின் எரிசக்தி அமைச்சர் கிறிஸ் போவன் (Chris Bowen) இதனை ஆதரித்தாலும்  ஆஸ்திரேலிய எரிசக்தி கவுன்சில் இதனை விமர்சித்துள்ளது. அத்துடன் தொழில்துறையில் ஏற்படக்கூடிய எதிர்மறையான தாக்கங்கள் குறித்தும் எச்சரித்துள்ளது.

(Visited 4 times, 4 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!