இலங்கை செய்தி

கடந்த அரசாங்கங்களை விட NPP அரசாங்கத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள மக்கள்!

தற்போதைய அரசாங்கம் ஊழலை நிவர்த்தி செய்வதில் திறம்பட செயல்படும் என்று இலங்கை மக்களில் 38.7 சதவீதம் பேர் நம்புவதாக கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

அதேவேளை கடந்த அரசாங்கங்கள் ஊழலை கையாள்வதில் திறம்பட செயல்பட்டதாக 12.5 சதவீதமானோர் நம்பியதாகவும் அந்த கருத்து கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஊழலுக்கு எதிரான வலுவான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இலங்கையில் அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்களுக்கு ஊழல் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

அண்மைக்காலமாக முன்னாள் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் பல எதிர்கட்சிகள் அரசாங்கத்தின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்படுவதையும் காணக்கூடியதாக உள்ளது.  முன்னதாக பிரிந்து சென்ற சில கட்சிகள் தற்போது கூட்டணி அமைக்கும் முயற்சிகளிலும்  ஈடுபட்டுள்ளன.

இவை அனைத்தும் தற்போதைய அரசாங்கம் ஊழலுக்கு எதிராக மேற்கொண்டுள்ள நடவடிக்கையின் விளைவாக இடம்பெறுவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!