தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதியின் வீட்டின் முன் ஒன்றுக்கூடிய மக்கள்!
நூற்றுக்கணக்கான தென் கொரியர்கள், உறைபனிக்கு மத்தியில் முன்னாள் தென்கொரிய ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகே ஒன்றுக்கூடியுள்ளனர்.
யூன் சுக் யோலை வெளியேற்றவும் கைது செய்யவும் அழைப்பு விடுத்தனர்.
ஜனாதிபதி பாதுகாப்பு சேவையின் பணியாளர்கள் வாயிலுக்கு அருகாமையிலும், யூனின் குடியிருப்புக்கு செல்லும் மலைப்பகுதிகளிலும் முள்வேலிகளை நிறுவுவதைக் காண முடிந்தது, இது மற்றொரு தடுப்பு முயற்சிக்கான தயாரிப்பாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக யூனை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்த நிலையில் அதனை நிறைவேற்றுவதற்காக கடந்த வெள்ளிக்கிழமை அதிகாரிகள் குழு யூனின் வீட்டை முற்றுகையிட்டது.
ஆனால் ஜனாதிபதி பாதுகாப்பு சேவையுடன் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த ஒரு பதட்டமான மோதலுக்குப் பிறகு சியோலில் உள்ள அவரது இல்லத்திலிருந்து பின்வாங்கியமை குறிப்பிடத்தக்கது.