காங்கோவில் mpox தொற்றுடன் போராடும் மக்கள் : வைத்தியர்கள் விடுத்துள்ள கோரிக்கை!

காங்கோவில் மக்கள் mpox தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி முதல், 4,500 க்கும் மேற்பட்ட சந்தேகத்திற்கிடமான mpox வழக்குகள் பதிவாகியுள்ளதுடன், கிட்டத்தட்ட 300 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
mpox இன் சமீபத்திய மரபணு மாற்றம் மக்களுக்கு வேகமாக பரவக்கூடும் என்பதைக் காட்டுகிறது.
பெரும்பாலான மக்களுக்கு உடலுறவு மூலமாக குறித்த தொற்று பரவியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது.
அத்துடன் ஆரம்பத்தில் பரவிய தொற்றானது மார்பு மற்றும் கைகளில் பரவிய நிலையில் தற்போது அந்தரங்க பகுதிகளில் அதிகளவில் பரவுவதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆகவே நோயாளிகள் தாங்களே முன்வந்து பரிசோதனை செய்து கொண்டால் மாத்திரமே இதனை கட்டுப்படுத்த முடியும் என்றும் அறிவித்துள்ளனர்.
(Visited 10 times, 1 visits today)