இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளில் இருந்து நாடு கடத்தப்படும் மக்கள் ; புலம்பெயர்வுக்கு எதிராக வரவுள்ள சட்டம்!

ஐரோப்பிய நாடுகளில் புலம் பெயர்வோரை நாடு கடத்தும் திட்டங்கள் நடைமுறைப்படுத்து வருகின்றன. சில நாடுகளில் புலம்பெயர்வோருக்கு எதிராக கடுமையான சட்டத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

ஒரு சில நாடுகள் குறிப்பிட்டத் தொகையை கொடுத்து அவர்களை வேறு நாடுகளுக்கு அனுப்புவதற்கான திட்டத்தையும் கையில் எடுத்துள்ளன.

இந்நிலையில் ஐரோப்பிய ஆணையம் புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துவதற்கான பொதுவான கொள்கையை உருவாக்கத் தவறியதை கிரேக்க அதிகாரி ஒருவர் விமர்சித்துள்ளார்.

போர் மற்றும் காலநிலை மாற்றம் உலகளாவிய இடப்பெயர்ச்சியை அதிகரித்து வருவதாக எச்சரித்துள்ளார்.

இடம்பெயர்வுக்கான துணை அமைச்சர் சோபியா வோல்டெப்சி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு முக்கிய ஐரோப்பிய யூனியன் குடியேற்ற ஒப்பந்தம் நடைமுறையில் இல்லை என்று கூறினார்.

மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் நடக்கும் போர்கள், காலநிலை மாற்றத்தின் விளைவுகளுடன் இணைந்து, ஐரோப்பாவை தொடர்ச்சியான நீண்ட கால அழுத்தத்திற்கு உட்படுத்தும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

புதிய ஐரோப்பிய ஒன்றிய இடம்பெயர்வு ஒப்பந்தம் 2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நடைமுறைக்கு வர உள்ளது.  27 உறுப்பு நாடுகளுடன் ஒரு புதிய சுற்று பேச்சுவார்த்தைகள் ஒரு வருடம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 57 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்