அம்பலாங்கொட பகுதியில் இனங்காணப்பட்ட முதலையால் பீதியில் மக்கள்!
அம்பலாங்கொட, மாதம்பை ஆற்றில் கடந்த இரு நாட்களாக முதலை ஒன்று தென்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 10 அடி கொண்ட முதலை இருப்பதாக தெரிவிக்கும் மக்கள், அச்சத்தின் காரணமாக மீன்பிடி நடவடிக்கைகளுக்கு செல்ல முடியாமல் தவிப்பதாகவும் கூறியுள்ளனர்.
எனவே சுமார் 10 அடி நீளம் கொண்ட இந்த முதலையை உரிய அதிகாரிகள் அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதுடன், இது குறித்து வனவிலங்கு திணைக்களத்துக்கும் தெரியப்படுத்திய போதும் இதுவரை எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
(Visited 10 times, 1 visits today)





