இஸ்ரேலை பாதுகாக்க பென்டகன் எடுத்த அதிரடி நடவடிக்கை
பயங்கரவாத தாக்குதல்களில் இருந்து இஸ்ரேலை பாதுகாக்க கூடுதல் போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் பயன்படுத்தப்படும் என பென்டகன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
ஹமாஸ், ஜிஹாத், சபுல்லா, ஹவுதி அமைப்புகள் மற்றும் ஈரானின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏவுகணை தாக்குதல்களில் இருந்து இஸ்ரேலை பாதுகாக்க கூடுதல் கடற்படைகளை நிலைநிறுத்த அமெரிக்கா தயாராக இருப்பதாக பென்டகன் மேலும் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஓமன் வளைகுடாவில் நிறுத்தப்பட்டுள்ள யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட், கடற்படை தாக்குதல் குழுவை திரும்ப பெற தயாராக உள்ளது.
மேலும் சக்திவாய்ந்த யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கடற்படை தாக்குதல் கப்பலை ஓமன் வளைகுடா பகுதியில் வைத்திருக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏவுகணைகளை அழிக்கும் திறன் கொண்ட போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட பயங்கரவாத அமைப்புகளிடமிருந்தோ அல்லது ஈரானிடமிருந்தும் எந்தவொரு அச்சுறுத்தலில் இருந்தும் இஸ்ரேலை பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியே வடக்கு தெஹ்ரானில் அண்மையில் கொல்லப்பட்டார். இதன் காரணமாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் தலைவர் அலி கமேனி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் தொண்ணூறு நாட்களில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.