ஐரோப்பா

ஜெர்மனியில் பாரிய பிரச்சினையை ஏற்படுத்தவுள்ள ஓய்வூதியம்

ஜெர்மனியில் ஓய்வூதியத்தால் பாரிய பிரச்சனைகள் ஏற்படலாம் என எதிர்வு கூறப்படுகின்றது.

ஜெர்மனியில் தற்பொழுது நடைமுறையில் உள்ள ஓய்வு ஊதியம் திட்டமானது எதிர்வரும் காலங்களில் பாரிய பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என்று ஜெர்மனியின் வேலை வழங்கும் அமைப்பினுடைய தலைவர் டோக்கர் தெரிவித்துள்ளார்.

அதாவது ஜெர்மனியில் தற்பொழுது ஓய்வு ஊதியம் பெறுகின்றவர்களில் 50 வீதம் ஓய்வு ஊதியத்தை பெறும் பொழுது 100 பேர் மட்டும் ஓய்வு ஊதியத்துக்கான பங்களிப்பை வழங்குகின்ற வேலையை செய்கின்றார்கள் என்றும் குறிப்பிட்டு இருக்கின்றார்.

இந்நிலையில் எதிர்வரும் காலங்களில் அதாவது 15 வருடங்களுக்கு பின 100 பேர் வேலை செய்து ஓய்வு ஊதியத்துக்கான பங்களிப்பை வழங்கும் பொழுது 75 பேர் ஓய்வு ஊதியத்தை பெற்றுக்கொள்வார்கள் என்றும், மேலும் ஓய்வு ஊதிய அமைப்புக்கு போதியளவு ஓய்வு ஊதிய பணம் கிடைக்கப்பெறாது என்றும் ஓய்வு ஊதிய அமைப்பானது ஓய்வு ஊதியம் பெறுகின்றவர்களுக்கு முறையான ரீதியில் பணம் வழங்முடியாத நிலை ஏற்படும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் ஜெர்மன் அரசாங்கமானது இந்த விடயத்தில் பாரியளவு சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!