பிரித்தானியாவில் கைது செய்யப்பட்ட ஓய்வூதியதாரர் : பையில் சிக்கிய மர்ம பொருள்!
800,000 பவுண்டுகள் பெறுமதியான போதைப் பொருள்கள் அடங்கிய இரண்டு சூட்கேஸ்களை விமான நிலையத்தில் கைவிட்டுச் சென்ற பிரித்தானிய ஓய்வூதியதாரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
74 வயதான நபர் தாய்லாந்தில் இருந்து விமானத்தில் இருந்து இறங்கியபோது பார்சிலோனா விமான நிலையத்தில் பைகளை விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.
பாங்காக்கிலிருந்து ஸ்பெயினுக்கு கடத்த முடிந்த பிறகு அவற்றை வெளியே கொண்டுவரும் நோக்கத்துடன் விமான நிலைய எஸ்கலேட்டர்களின் கீழ் டெர்மினல் ஒன்றில் மறைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
குறித்த பைகளை சோதனைக்கு உட்படுத்தியபோது சூட்கேஸ்களில் 51 கிலோவுக்கும் அதிகமான வெற்றிட பேக் செய்யப்பட்ட கஞ்சா இருந்ததாக கூறப்படுகிறது.
(Visited 2 times, 1 visits today)