ஜெர்மனியில் ஓய்வூதிய தொகையில் ஏற்படவுள்ள மாற்றம்
ஜெர்மனியில் ஒய்வூதிய தொகையை அதிகரிக்கவுள்ளதாக மத்திய தொழிலாளர் மற்றும் சமூக விவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் ஒய்வூதிய தொகை 4.57 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. நாட்டின் பண வீக்கத்தின் அடிப்படையில் ஓய்வூதிய கொடுப்பனவு அதிகரிக்கப்படுவது வழமையான செயற்பாடாகும்.
அதற்கமைய நடப்பாண்டில் ஜெர்மனியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதேசங்களில் ஒரே அளவான ஓய்வு ஊதிய அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, எதிர்வரும் ஏழாம் மாதம் முதல் 700 யூரோவை ஓய்வூதியமாக பெறுவோரின் தொகை 731 யூரோவாக அதிகரிக்கப்படும்.
800 யூரோவை ஓய்வு ஊதியமாக பெறுவோரு் 836 யூரோவாக பெறுவர். 900 யூரோவை ஓய்வு ஊதியமாக பெறுவோர் 941 யூரோவை ஓய்வூதியமாக பெறவுள்ளனர்.
1000 யூரோவை ஓய்வு ஊதியமாக பெறுகின்றவருக்கு 1150 யூரோவை ஓய்வூதியமாக பெறுவார்கள் என அமைச்சு தெரிவித்துள்ளது.