இலங்கை

இலங்கையில் TIN இல்லாத நபர்களுக்கு அபராதமா? வெளியான முக்கிய தகவல்

இலங்கையில் TIN அல்லது வரி அடையாள எண்ணைப் பெறாத நபர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கை உள்நாட்டு இறைவரி திணைக்களத்தால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நிதியமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

18 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொரு குடிமகனும் வரி கோப்பினை ஆரம்பிக்க வேண்டியது கட்டாயம் என அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த நடவடிக்கையை கட்டாயமாக்குவதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது.

உரிய வரி அடையாள எண்ணைப் பெறாதவர்களுக்கு 50,000 ரூபா அபராதம் விதிக்கப்படும் என அப்போது அறிவிக்கப்பட்டது.

எனினும், இதனை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக, பெப்ரவரி முதலாம் திகதி முதல் அதனை கட்டாயமாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

(Visited 47 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்