வாக்களிக்க விடுப்பு கொடுக்காத நிறுவனங்களின் முதலாளிகளுக்கு அபராதம்

தனியார் துறை மற்றும் அரை பொதுத்துறை ஊழியர்களுக்கு வாக்களிப்பதற்காக விடுமுறை அளிக்குமாறு அனைத்து தனியார் நிறுவனங்களையும் பாஃப்ரல் அமைப்பு கேட்டுக்கொள்கிறது.
இந்தச் சட்டத்தை உதாசீனப்படுத்திய எந்தவொரு முதலாளியும் நீதிமன்றில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு இரண்டு இலட்சம் ரூபா அபராதமும் ஒரு மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால், தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால், உடனடியாக தமக்கு அறிவிக்குமாறு பணியாளர்களை பாஃபரல் அமைப்பு கேட்டுக் கொள்கிறது.
(Visited 14 times, 1 visits today)