அவுஸ்திரேலியாவில் 2025-ஆம் ஆண்டில் 197 பாதசாரிகள் பலி
அவுஸ்திரேலியாவில் பாதசாரிகள் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
2025-ஆம் ஆண்டில் மட்டும் 197 பாதசாரிகள் உயிரிழந்துள்ளதாகத் தேசிய சாலைப் பாதுகாப்புத் தரவுகள் தெரிவிக்கின்றன.
இது 2007-ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
குறிப்பாக, நகர்ப்புறங்களில் பயன்படுத்தப்படும் கனரக வாகனங்கள் மற்றும் அவற்றில் பொருத்தப்பட்டுள்ள ‘புல் பார்கள்’ (Bull bars) விபத்துகளின் தீவிரத்தை அதிகரிப்பதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
குறைந்த வேகத்தில் மோதினாலும், இந்த இரும்புத் தடுப்புகள் பாதசாரிகளின் தலை மற்றும் உடலில் பாரிய காயங்களை ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது மொத்த சாலை மரணங்கள் 1,300-ஐத் தாண்டியுள்ள நிலையில், நகர்ப்புறச் சாலைகளில் புல் பார்களின் பயன்பாடு குறித்து முறையான சட்டங்கள் மற்றும் விவாதங்கள் தேவை எனச் சாலைப் பாதுகாப்பு நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்





