ஜெர்மனியில் கொடுப்பனவில் மாற்றம் – வெளியான முக்கிய தகவல்
ஜெர்மனியில் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கொடுப்பனவில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன.
ஜெர்மனியில் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வநதுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் ஆடி மாதத்தில் இருந்து புதிய நடைமுறை மூலமாக இதற்கு விண்ணப்பம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஜெர்மனியின் தொழில் மந்திரி வுபேட்டஸ் கயில் அவர்கள் தெரிவித்து இருக்கின்றார்.
ஜெர்மனியில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வந்த காலங்களில் பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தது.
அதனால் பல மக்கள் தங்களது வேலை வாய்ப்பபை இழந்து வீடுகளில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அந்த கால கட்டத்தில் மொத்தமாக தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்காக 35.5 பில்லியன் யுரோக்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 6 மில்லியன் மேற்பட்டவர்கள் முற்று முழுதாக வேலை இழப்பதில் இருந்து தவிர்க்கப்பட்டதாகவும் தெரிவித்து இருக்கின்றார்.
இதேவேளையில் தற்பொழுது மொத்தமாக 1 லட்சத்து 62 ஆயிரம பேர் மட்டுமே தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் உள்ளதாக தெரியவந்திருக்கின்றது.