மொட்டு கட்சியின் முயற்சி குறித்து சம்பிக்க எம்.பி வெளிப்படுத்திய தகவல்
ராஜபக்ச குழு எந்த வகையிலும் பாராளுமன்றத்திற்குள் பிரவேசிக்க முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில், எதிர்வரும் தேர்தலில் ராஜபக்சக்களை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்ய முடியாது எனவும், பல்வேறு யுக்திகளை கையாண்டு ராஜபக்சவை அரசியலில் வைத்திருக்க பசில் ராஜபக்ச செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
1931 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ராஜபக்ச இல்லாத நாடாளுமன்றம் உருவாக்கப்படுவதை தடுப்பதே தமது நோக்கமாகும் எனவும், தற்போது ஐந்து ராஜபக்சக்களை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்வது தொடர்பில் பல்வேறு திட்டங்களை தயாரித்து வருவதாகவும் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இவ்வாறானதொரு நிலையில் ராஜபக்ச நாடாளுமன்றத்துக்குள் நுழைவதற்கான தேர்தல் முக்கியமா என ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பப்படும் என ஊடகவியலாளர் சந்திப்பில் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
எனவே நாட்டை நெருக்கடியில் இருந்து விடுவித்து ராஜபக்சவை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்வதே சிறந்ததா என ஜனாதிபதியிடம் தானே கேட்பதாக அவர் கூறினார்.
ஜனாதிபதித் தேர்தல் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும் என்றும், அது குறித்து பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும், செப்டம்பர் 17 முதல் ஒக்டோபர் 17 வரை அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ராஜபக்ச அல்லாத எந்தவொரு நபருக்கும் வாக்களிக்க நாட்டு மக்கள் தயாராக உள்ளதாக பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.இவ்வாறான நிலையில் பசில் ராஜபக்ச ஜனநாயகவாதியாகி ராஜபக்சவின் பிழைப்புக்காக நாடாளுமன்ற தேர்தலை கோருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.