சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் பதவியில் தொடரும் பேட் கம்மின்ஸ்
2026ம் ஆண்டின் ஐ.பி.எல்(IPL) தொடருக்கான ஏலம் அடுத்த மாதம் 16ம் திகதி அபுதாபியில்(Abu Dhabi) நடைபெறவுள்ளது. இதன் காரணமாக அனைத்து அணிகளும் தக்கவைத்துக்கொள்ளும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளது.
இதன்படி ஐ.பி.எல் தொடரில் 10 அணிகளும் விடுவித்த வீரர்கள் மற்றும் தக்கவைத்த வீரர்கள் விவரம் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 173 வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அடுத்த ஐ.பி.எல் தொடரிலும் சன்ரைசர்ஸ் ஐதராபாத்(Sunrisers Hyderabad) அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் செயல்படுவார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத் அணியை கம்மின்ஸ் வழி நடத்துவது இது 3வது முறையாகும்.
கடந்த 2 தொடர்களிலும் பேட் கம்மின்ஸ் தலைமையில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 2025ம் ஆண்டுக்கான தொடரில் 6வது இடத்தையும் 2024ம் ஆண்டுக்கான தொடரில் 2வது இடத்தை பிடித்தது.





