நாட்டை விட்டு தப்பியோடிய போதகர்!!! சி.ஐ.டி வளைவீச்சு
சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோவிற்கு நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், அவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்திருந்தது. எனினும், முன்னதாகவே அவர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான SQ 469 என்ற விமானத்தில் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத நல்லிணக்கத்துக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட போதகர் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டிருந்தார்.
இது தொடர்பான விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இவ்வாறான விசாரணையை ஆரம்பிக்குமாறு உத்தரவிடப்பட்டதன் பின்னணியில் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ சிங்கப்பூர் சென்றுள்ளார்.
இதேவேளை, இன்று காலை செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்திய கத்தோலிக்க திருச்சபை, மதங்களுக்கு எதிராக போதகர் வெளியிட்ட கருத்துகளை வன்மையாகக் கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ளது.
ஜெரோம் பெர்னாண்டோவுக்கும் கத்தோலிக்க திருச்சபைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அருட்தந்தை சிறில் காமினி குறிப்பிட்டுள்ளார்.