Air India விமானத்தில் பதற்றத்தை ஏற்படுத்திய பயணிகள்

Air India விமானத்தில் பல மணிநேரமாக சிக்கிக்கொண்ட பயணிகள் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்ப்பாட்டம் செய்த காணொளி சமூக ஊடகங்களில் வலம் வருகிறது.
விமானம் மும்பையிலிருந்து டுபாய்க்குப் புறப்படவிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த சனிக்கிழமை காலை மணி 8.25 மணிக்கு விமானம் புறப்பட வேண்டியது. தொழில்நுட்பக் கோளாற்றினால் பல மணிநேரத் தாமதம் ஏற்பட்டது.
விமானத்தில் இருந்த பயணிகள் ஆவேசமாக பணியாளர்களிடம் பதில்கள் கேட்பது காணொளியில் தெரிந்தது.
அவர்களில் ஒருவர் விமானத்தின் மேற்பரப்பை அடிக்கத் தொடங்கினார். “உங்களை நம்ப முடியாது, கதவைத் திறங்கள்” என பயணிகள் கூச்சலிட்டுள்ளனர்.
பயணிகளின் ஆர்ப்பாட்டம் தீவிரமடைந்த பிறகு அவர்கள் பிற்பகல் 1 மணிக்கு விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
பிறகு ஒருவழியாக விமானம் மாலை 4.32 மணிக்குப் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.