இன்றைய முக்கிய செய்திகள் செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் விமானத்தில் வெப்பத்தைத் தாங்க முடியாமல் தவித்த பயணிகள்

அமெரிக்க விமானமொன்றில் பயணிகள் வெப்பத்தைத் தாங்கமுடியாமல் தவித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குளிர்சாதனம் வேலை செய்யவில்லை என்றும் வெப்பநிலை மிகவும் அதிகமாக உள்ளது எனவும் பயணித்த பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Tiktok தளத்தில் பகிரப்பட்ட காணொளியில் பயணிகள் பலர் விசிறிக்கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. கடந்த மாதம் 24ஆம் திகதி, brigchicago எனும் கணக்கில் காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டது.

வெப்பத்தைப் பொருட்படுத்தாமல் அமைதி காக்கும்படி விமான ஊழியர்கள் கூறியதாகவும் பெண் குறிப்பிட்டுள்ளார்.

காணொளியைக் கண்ட இணையவாசிகள் சிலர் ஊழியர் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.

இது நரகத்துக்குச் சமம், என சிலர் குறிப்பிட்டுள்ளனர். “நான் வழக்கமாக அமைதியாக இருப்பேன். இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் பீதியடைந்திருப்பேன்,” என்று சிலர் கூறினர்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!