ஐரோப்பிய நாடுகளுக்கு ஆபத்தான பயணங்களை தொடரும் பயணிகள் – கரை ஒதுங்கிய படகு!

செனகலில் இருந்து ஐரோப்பாவை அடையும் நோக்கில் 112 புலம்பெயர்ந்தோருடன் பயணித்த படகு ஒன்று தலைநகர் டக்கரில் கரை ஒதுங்கியதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு பயணிக்க அவர்கள் இலக்கு வைத்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
பயணிகள் செனகல் மற்றும் அண்டை நாடான மாலி மற்றும் காம்பியாவைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். படகு காம்பியாவிலிருந்து புறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளில் எவ்வளவு சட்டத்திட்டங்கள் கடுமையாக போடப்பட்டிருந்தாலும், அங்கு புகலிடம் மறுக்கப்பட்டாலும் கூட பலர் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு அங்கு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 2 times, 2 visits today)