ஸ்பெயின் நோக்கி சென்ற விமானத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி – இழப்பீடாக 15,000 யூரோ கோரல்
ஸ்பெயின் நோக்கி சென்ற Ryanair விமானத்தில் தொந்தரவு விளைவித்து விமானத்தைத் திசைதிருப்பச் செய்த பயணி மீது நிறுவனம் வழக்குத் தொடுத்துள்ளது.
இழப்பீடாக 15,000 யூரோ கோரப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு ஏப்ரல் 9ஆம் திகதியன்று டப்ளினிலிருந்து ஸ்பெயினில் இருக்கும் Lanzarote தீவுக்குச் சென்றுகொண்டிருந்த விமானத்தில் சம்பவம் நடந்தது.
பயணி மன்னிக்க முடியாத முறையில் நடந்துகொண்டதாக நிறுவனம் கூறியது. அதன் விளைவாக விமானம் போர்ச்சுகலின் (Portugal) போர்ட்டோ (Porto) நகருக்குத் திசைதிருப்பப்பட்டது. ஓரிரவு அது தடங்கலைச் சந்தித்தது.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்குத் தங்குமிடக் கட்டணம், செலவுப் பணம், விமானத்தைத் தரையிறக்குவதற்கான கட்டணம் முதலியவற்றுக்கு 15,000 யூரோ செலவானது என்று நிறுவனம் குறிப்பிட்டது.
அந்தப் பணத்தைப் பயணியிடமிருந்து பெற வழக்குத் தொடுத்துள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது