ஸ்பெயினிலிருந்து சென்ற போது ஆட்டங்கண்ட விமானம் – பெட்டி வைக்கும் இடத்தில் சிக்கிய பயணி

ஸ்பெயினின் மேட்ரிடிலிருந்து உருகுவேயின் மோன்ட்டவிடேயோவுக்குச் சென்றுகொண்டிருந்த Air Europa விமானம் அண்மையில் நடுவானில் ஆட்டங்கண்டது.
இந்த சம்பவத்தில் பலர் காயமுற்றனர். இருக்கை பட்டி அணியாத சிலர் இருக்கைகளிலிருந்து தூக்கி எறியப்பட்டனர்.
சம்பவத்தின்போது விமானத்தில் இருக்கைக்கு மேல் பெட்டிகளை வைக்கும் இடத்தில் ஒருவர் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.
சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட காணொளியில் பெட்டி வைக்கும் இடத்திலிருந்து ஒருவர் வெளியாவதைப் பார்க்கமுடிகிறது.
அவரைக் கீழே இறக்குவதற்குச் சக பயணிகள் சிலர் உதவுகின்றனர். அவர் எப்படி பெட்டி வைக்கும் இடத்திற்குள் சென்றார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
விமானம் அவசரமாக பிரேசிலில் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் 325 பயணிகள் இருந்தனர்.
சுமார் 40 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(Visited 25 times, 1 visits today)