6,000 அடி கீழிறங்கிய லண்டன் சென்ற விமானம் – திகில் அனுபவத்தை பகிர்ந்த பயணி
சிங்கப்பூரில் இருந்து லண்டன் நோக்கி சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஆட்டங்கண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த விமானம் மிக மோசமாக ஆட்டங்கண்டதில் பயணிகள் சிலர் இருக்கைகளுக்கு உயரே பெட்டி வைக்குமிடத்தில் இடித்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் ஆட்டங்கண்டபோது அவர்கள் இருக்கையின் பெல்ட் அணியாமல் இருந்ததாகக் கூறப்பட்டது.
அந்த விமானத்தில் பயணம் செய்த ஒருவர் விமானம் ஆட்டங்கண்டதைப் பற்றி செய்தி நிறுவனத்திடம் பேசினார்.
“திடீரென்று விமானம் மேல்நோக்கிப் பறந்தது. பிறகு விமானம் ஆடியது. திடீரென்று விமானம் கீழறங்கியது,” என்று அந்தப் பயணி பகிர்ந்துகொண்டார்.
சிலரின் தலை விளக்கும் முகக்கவசமும் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் போய் இடித்துக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
லண்டனிலிருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்ட அந்த விமானம் ஆட்டங்கண்டதில் ஒருவர் மாண்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
30 பேருக்குக் காயம் விளைவிக்கப்பட்டது. மருத்துவமனையில் 18 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
12 பேர் சிகிச்சை பெறுவதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் Facebook பக்கத்தில் தெரிவித்தது.