அமெரிக்கா சென்ற எயார் பிரான்ஸ் விமானத்தில் உயிரிழந்த பயணியால் பரபரப்பு

அமெரிக்கா சென்றஎயார் பிரான்ஸ் விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸின் திஹித்தி தீவு விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவும் லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு பயணித்துக் கொண்டிருந்த விமானத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விமானம் பல அடி உயரத்தில் பயணித்துக்கொண்டிருந்த நிலையில் அதில் பயணித்துக்கொண்டிருந்த பயணி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாகவும், அதை அடுத்து விமானம் பயணத்தை ஆரம்பித்த விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
(Visited 19 times, 1 visits today)