தெற்கு பிலிப்பைன்ஸில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்து – 15 பேர் மரணம்!
தெற்கு பிலிப்பைன்ஸில் இன்று அதிகாலை நடந்த படகு விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அதேநேரம் 316 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், பலரை தேடும் நடவடிக்கைகள் முடக்கிவிடப்பட்டுள்ளதாகவும் கூறுப்படுகிறது.
ஜம்போங்காவிலிருந்து (Zamboanga) புறப்பட்ட பயணிகள் கப்பலான MV த்ரிஷா கெர்ஸ்டின் 3 (MV Trisha Kerstin 3), சுலு ( Sulu ) மாகாணத்தில் உள்ள ஜோலோவுக்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்துள்ளது.
352 பேர் பயணிக்கும் திறன் கொண்ட இந்தக் கப்பலில் 332 பயணிகள் மற்றும் 27 பணியாளர்கள் இருந்ததாக PCG தெரிவித்துள்ளது.
மேலும் 28 பேரை தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மிண்டானாவோ (Mindanao) மாவட்டத்தின் கடலோர காவல்படை தளபதி ரோமல் துவா (Romel Dua) அறிவித்துள்ளார்.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடந்து வருவதாகவும், மீட்பு முயற்சிகளுக்கு உதவ இராணுவ விமானங்கள் மற்றும் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.





