ஜார்க்கண்டில் பகுதியளவு எரிந்த நிலையில் இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்பு
ஜார்க்கண்டின்(Jharkhand) கிரிதிஹ்(Giridih) மாவட்டத்தில் உள்ள ஒரு காட்டில் இளம் பெண்ணின் எரிந்த உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் சினோ(Sino) கிராமத்தைச் சேர்ந்த 21 வயது சஹினா தஹுல் அன்சாரி(Sahina Dahul Ansari) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பகோதர்(Bagodar) காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெக்கோ-கரிபஹாரி(Peko-Karipahari) வனப்பகுதிக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட சடலம், இறந்த பெண்ணின் தந்தை தஹுல் அன்சாரி(Dahul Ansari) மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், வரதட்சணைக்காக தனது மகளை கொன்று பின்னர் ஆதாரங்களை மறைக்க சடலத்தை எரித்ததாக மருமகன் மற்றும் அவரது தாய் மீது தஹுல் அன்சாரி வழக்கு பதிவு செய்துள்ளார்.




