இன்று கூடுகிறது நாடாளுமன்றம்: முக்கிய விடயங்கள் குறித்து விவாதம்!
இலங்கை நாடாளுமன்றம் இன்று (20) முற்பகல் அந்நாட்டு நேரப்படி 9.30 மணிக்கு கூடுகின்றது.
ஜனவரி 23 ஆம் திகதிவரை 4 நாட்கள் நடைபெறும் சபை அமர்வுகளின்போது முக்கிய பல விடயங்கள் தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளன.
இலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள கல்வி மறுசீரமைப்பு சம்பந்தமாக கூடுதல் கவனம் செலுத்தப்படக்கூடும்.
அத்துடன், இவ்வார நாடாளுமன்ற அமர்வின்போது பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிரணி சபாநாயகரிடம் கையளிக்கக்கூடும் என தெரியவருகின்றது.
அதேவேளை, டித்வா புயல் விவகாரம் பற்றி விசாரிப்பதற்காக விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கும் யோசனை பற்றியும் விவாதிக்கப்படவுள்ளது.





