சில வாக்குறுதிகளை நிறைவேற்ற அதிகாரம் உள்ள பாராளுமன்றம் தேவை
பணம், ஊடகம், அரச அதிகாரம் என தீய சக்திகளின் நச்சு பிரவாகங்கள் தேர்தல் காலங்களில் பிரயோகப்படுத்தப் பட்டாலும் மக்கள் அவற்றை நம்பாது சம்பிரதாய ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு எமது சிந்தனை வாதத்தை ஏற்றுக் கொண்டு உறுதியான அவதான நிலைப்பாட்டை எடுத்து எம்மை நம்பி வாக்களித்தனர்.
இந்த வெற்றியின் பயன் எதிர்வரும் 14 ஆம் திகதி உறுதிப்படுத்தப்படுவது உறுதி என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று தெரிவித்தார்
கொழும்பு தலவதுகொட Grand monarch hotel இல் நடைபெற்ற பொதுத் தேர்தல் வேட்பாளர்களுக்கான அறிவுரை வழங்கும் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றும் போது ஜனாதிபதி தேர்தலில் நாம் வெற்றி பெற்றாலும் நாட்டின் அதிகாரம் மிக்க முழுமையான செயற்பாட்டுக்கு பாராளுமன்ற அதிகாரம் தேவை 3.
அமைச்சர்கள் மாத்திரமே நாட்டின் நிர்வாக இயந்திரத்துக்கு தலைமை தாங்குகின்றோம் அதனால் தீர்க்கமான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு அவசியமான அதிகாரம் எமக்கு 14 ஆம் திகதியே கிடைக்கவிருக்கிறது.
ஜனாதிபதி அதிகாரத்துடன் நிர்வாக இயந்திரமும் இணைந்தால் மட்டுமே எமது வேலை திட்டங்கள் மற்றும் அரசியல் இருப்பை கட்டி எழுப்ப முடியும்.
தற்போதைய சூழ்நிலையில் பாராளுமன்ற அதிகாரம் முழுமையாக கிடைக்கும் வரை உற்வேகத்துடன் பொறுமையாக செயல்பட வேண்டிய சந்தர்ப்பங்கள் சூழ் நிலைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழ் நிலைகளும் நிலவுகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.