பாரீஸ் ஒலிம்பிக்: வெண்கலம் வென்ற இந்தியா

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.
இந்நிலையில் 7-வது நாளான இன்று துப்பாக்கி சுடுதலில் ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் இறுதிச்சுற்றில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலம் வென்றுள்ளார்.
ஒலிம்பிக் வரலாற்றில் 50 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் முதல் பதக்கம் பெற்று இந்திய வீரர் சாதனை படைத்துள்ளார்.
இந்த போட்டியில் முதல் இடத்தை பிடித்த சீனா தங்கமும், இரண்டாம் இடம் பிடித்த உக்ரைன் வெள்ளிப்பதக்கமும் வென்றன.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு இதுவரை 3 பதக்கங்கள் கிடைத்துள்ளன. 3 பதக்கங்களும் துப்பாக்கி சுடுதலில் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 24 times, 1 visits today)