இலங்கை

யாழில் ஆசிரியரொருவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்ட பெற்றோர்!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி முன்பாக இன்று வெள்ளிக்கிழமை(01) காலை பாடசாலை மாணவர்களின் பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட்டுள்ளனர் .

பாடசாலை பிரதான நுழைவாயில் முன்பாக ஒன்றுகூடிய பெற்றோரே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியரொருவர் பாடசாலைக்கும் பாடசாலை அதிபருக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்கள் வாயிலாக செயல்பட்டதாக தெரிவித்தே பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியர் சங்கமொன்றினை பயன்படுத்தி தமது சொந்த நலனை அடிப்படையாக கொண்டு பாடசாலைக்கு எதிரான செயற்பாடுகளை தொடர்ந்தும் செய்வதாக குற்றம் சாட்டிய பெற்றோர் குறித்த ஆசிரியருக்கு இடமாற்றம் வழங்கவேண்டும் என தெரிவித்தனர்.

சில வாரங்களுக்கு முன்பு குறித்த சம்பவம் தொடர்பாக பாடசாலை மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(Visited 5 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்