நொய்டாவில் விஷம் குடித்து பெற்றோர் மரணம் – 3 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி
நொய்டாவில்(Noida) ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பம் விஷம் குடித்ததில் தாய் மற்றும் தந்தை உயிரிழந்துள்ளதாகவும் அவர்களது மூன்று குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் ஷ்ரவன் மற்றும் அவரது மனைவி நீலம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, குடும்பப் பிரச்சினைகள் காரணமாக இந்த தம்பதியினர் குழந்தைகைளுடன் விஷம் குடித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தம்பதியினரின் 10, 8 மற்றும் 4 வயதுடைய மூன்று குழந்தைகள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.




