இலங்கையில் அதிகரித்து வரும் பக்கவாத நோயாளிகள்!
பக்கவாத நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது நான்கு பேரில் ஒருவருக்கு தமது வாழ்நாளில் பக்கவாதம் ஏற்படும் நிலை காணப்படுவதாக இலங்கை தேசிய பக்கவாத சம்மேளனத்தின் தலைவர் டொக்டர் காமினி பத்திரன தெரிவித்தார்.
கடந்த 29ஆம் திகதி உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தேசிய பக்கவாத சங்கத்தின் தலைவர் வைத்தியர் காமினி பத்திரன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “வாழ்நாளில் 4 பேரில் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படுகிறது. நீங்கள் அதை பற்றி அறிந்திருந்தால் நோயால் பாதிக்கப்படமாட்டீர்கள்” எனக் கூறியுள்ளார்.
(Visited 4 times, 1 visits today)