இமாச்சலப் பிரதேசத்தில் விபத்துக்குள்ளான பாராகிளைடர் – இளம் விமானி மரணம்
இமாச்சலப் பிரதேசத்தின்(Himachal Pradesh) காங்க்ரா(Kangra) மாவட்டத்தில், பாராகிளைடர் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு நடுவானில் சமநிலையை இழந்து விபத்துக்குள்ளானதில் அனுபவம் வாய்ந்த விமானி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற பிர் பில்லிங்(Bir Billing) பாராகிளைடிங் தளத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பிர் பில்லிங் பாராகிளைடிங் சங்கத்தின் அதிகாரிகளின் கூற்றுப்படி, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பாராகிளைடரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, நடுவானில் சமநிலையை இழந்து, ஏவுதளத்திற்கு கீழே உள்ள சாலை அருகே விபத்துக்குள்ளானது. உடன் வந்த சுற்றுலாப் பயணி காயமடைந்த நிலையில், விமானி உயிரிழந்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த விமானி மண்டி(Mandi) மாவட்டத்தில் உள்ள பரோட்டைச்(Barot) சேர்ந்த மோகன் சிங்(Mohan Singh) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.





