போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் பாலஸ்தீன கைதிகள் விடுவிப்பு
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே தொடங்கிய போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் 90 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய சிறைச்சாலை சேவை அறிவித்துள்ளது.
நேற்று தொடங்கிய போர் நிறுத்தத்தின் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த கைதிகளில் 69 பெண்கள் மற்றும் 21 ஆண்கள் உள்ளடங்குவதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், ஹமாஸால் பிடிக்கப்பட்ட மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 1 times, 1 visits today)