இஸ்ரேலிய கடவுச்சீட்டு கொண்ட பாலஸ்தீனியருக்கு பிரித்தானியாவில் தஞ்சம்
இஸ்ரேலிய குடியுரிமை கொண்ட பாலஸ்தீனியர் ஒருவருக்கு, பிரித்தானியா அரசு அகதி அந்தஸ்து வழங்கியுள்ளது.
இஸ்ரேலில் தமக்கு உயிருக்கு ஆபத்து மற்றும் அடக்குமுறை இருப்பதாக ‘ஹசன்’ (புனைபெயர்) எனும் இளைஞர் தொடர்ந்த வழக்கில், நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு இந்த வெற்றி கிடைத்துள்ளது.
இஸ்ரேலிய கடவுச்சீட்டு வைத்திருக்கும் ஒரு பாலஸ்தீனியருக்கு பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து வழங்கப்படுவது இதுவே முதல் முறை என நம்பப்படுகிறது.
முன்னதாக, முன்னாள் உள்துறை அமைச்சரின் தலையீட்டால் இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தது.
எனினும், இஸ்ரேலில் பாலஸ்தீனியர்கள் திட்டமிட்ட பாகுபாடுகளுக்கு உள்ளாவதை நீதிமன்றம் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது.
இஸ்ரேல் ஒரு இனவெறி ஆட்சி முறையைக் கொண்ட நாடு, அங்கு பாலஸ்தீனியர்கள் ஒடுக்கப்படுகிறார்கள்” என ஹசன் தனது வாதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
சுமார் ஏழு ஆண்டுகளாகப் போராடி வந்த இவருக்கு, தற்போது கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், சர்வதேச அரங்கில் இஸ்ரேலின் மனித உரிமை மீறல்கள் குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.





