ஐக்கிய அரபு அமீரகத்தில் கல்வியைத் தொடரும் பாலஸ்தீன பிள்ளைகள்

Pபோரால் பாதிக்கப்பட்ட காசா பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த பாலஸ்தீன மக்களுக்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் கல்வி மையம் திறக்கப்பட்டுள்ளது.
தஞ்சம் பெற்றுள்ள மக்களின் பிள்ளைகள் கல்வியைத் தொடரும் வகையில் அபுதாபியில் புதிய கல்வி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் தற்போது சுமார் 800 பாலஸ்தீன மாணவர்கள் தங்கள் படிப்பை தொடர்ந்து வருகின்றனர்.
போர் காரணமாக கல்வியில் இடைவெளி ஏற்பட்ட அவர்களுக்கு, இந்த மையம் முக்கிய ஆதரவாக விளங்குகிறது.
கல்வி, வசதி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களில் சிறப்பான அமைப்பை வழங்கியதற்காக, மாணவர்கள் மற்றும் பெற்றோர், அமீரக அரசுக்கு தங்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
இந்நடவடிக்கை, போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதியான எதிர்காலத்தை வழங்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
(Visited 2 times, 2 visits today)